டெல்லியில்

காற்று மாசு
என்றார்கள்
டெல்லி நகரம் நரகம்
என்றார்கள் ...

வாழத் தகுதி இல்லை
என்றார்கள் ..
டெல்லி நகரம்
நரகம் என்றார்கள் ...

எப்படி வந்தது
இந்தக்காற்றுமாசு ..
எங்கிருந்து வந்தது
காற்றுமாசு ...

திடீரென்று
கூக்குரல்கள் ..
தினம் தினம் செய்தி
காற்று மாசு பற்றி ...

எப்படி நீக்குவது
காற்றுமாசு ..
என்றே நாமும்
நினைத்திருக்க ...

மாசில்லா வாகனம்
கண்டுபிடிக்க ..
மாற்று வழிகளை 
நாம் யோசிக்க ...

பட்டாசுகள் வெடிக்க
பல தடை விதிக்கலாமாவென..
மரம் நடவேண்டுமென ..
மழை வர வேண்டுமென..

மனமெல்லாம் தவித்தது.
தீர்வுக்காய்..
தீர்வு வந்ததாம்
ஆக்சிஜன்  குப்பியில்  ....

சொல்கின்றன
செய்திகள் பரபரப்பாய் ...
சென்னையிலும்
காற்று மாசாம் ...

'தனி ஒருவன்'
நினைவு வர
நீரும் காற்றும் காசு
ஆனது புரிய வர..

மாசுச் செய்தி
முன்னே வந்தது ..
ஆக்சிஜன் விற்பனை
பின்னே வந்தது ...

அறிதல் ஒன்றே நம்மை காக்கும் ..!
மரம் நடுதல் ஒன்றே தீர்வாகும் ...!
மரம் வளர்ப்பது ஒன்றே தீர்வாகும் ..!!

.............தெய்வானை .......................