Header Ads Widget

Responsive Advertisement

வணங்குகிறேன் முன்னோரே

கொண்டாடி முடித்தோம் நாம் நவராத்திரித் திருவிழா,

கொண்டாடப் போகின்றோம் தீபாவளித் திருவிழா,

திண்டாட்டம் சில இங்கு இருந்தாலும் கூட

கண்டுகொண்டேன் நான் ஒரு சந்தோஷம் எங்கும்.


தெருவுக்குச் சென்றாலோ வகை வகையாய்க் கடைகள்,

கடைகளின் முன்னாலோ மக்களின் தலைகள்,

மதநம்பிக்கை இல்லோரும் கடைவைத்திருந்தார்கள்,

மத நம்பிக்கைக்கு அப்பார்ப்பட்டும் கடைவைத்திருந்தார்கள்.


வாங்கியோர் முகத்திலோ வாங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சி,

விற்போர் முகத்திலோ வருமானம் தந்த குளிர்ச்சி,

இளையோர் முகத்திலோ மகிழ்ச்சியால் எழுச்சி,

வாலிபங்கள் கண்களிலோ தெரிந்தது ஒரு கிளர்ச்சி.


ஒன்றுபட வைப்பதற்கு கொண்டாட்டம் தேவை,

மனம் மகிழ்ந்து வாழ்வதற்கு கொண்டாட்டம் தேவை,

இயந்திரமாய் மாறிவிட்ட மனிதவாழ்க்கை மாறி,

அழுத்தங்கள் குறைக்கவும் கொண்டாட்டம் தேவை,

எப்படித்தான் சிந்தித்தீர் மூத்தோரே முன்னோரே,

வியந்து போய் பார்க்கின்றேன் உன் தீர்க்க தரிசனத்தை,

தாழ்பணிந்து வணங்குகின்றேன் 

எம் தலைமுறையே பெருமையுடன்.


சுலீ. அனில் குமார்

கே எல் கே கும்முடிப்பூண்டி.