Header Ads Widget

Responsive Advertisement

இரும்புப் பெண்மணி

இரும்புப் பெண்மணி
(அக்டோபர், 31 அன்னை இந்திரா நினைவுதினம்)

இந்தியா கண்ட இரும்புப் பெண்மணி,
இந்தியப் பிரதமராம் ஒரே பெண்மணி,
இந்திரா என்ற நேருவின் கண்மணி.
தந்தை வகுத்ததோ ஐந்தாட்டுத் திட்டம்,
மகள் அளித்ததோ இருபதம்சத் திட்டம்,
குறை சொல்ல இருந்தது ஓர் அவசரநிலை, ஆனால்
அதற்கும் வேண்டுமே எதிர்கொள்ளும் தைரியம்.

பாகிஸ்தானையே பதறச்செய்தவர்,
வங்காளதேசத்தைப் புதிதாய்த் தந்தவர்,
பிரிவினைவாதிகளை பின்வாங்கவைத்தவள்,
பிரிக்காமல் இருந்திட உயிரையே தந்தவள்,
பாரதத்தை ஆண்டதோ பதினாறு ஆண்டுகள்,
பரிசாகப் பெற்றதோ பதினாறு குண்டுகள்,
ஆபத்தில் காப்பாற்றவேண்டிய காவலன்,
அடிவயிற்றில் பொழிந்தான் பதினாறு குண்டுகள்.

தேசநலனுக்காய் உயிரையே கொடுத்தவள்,
நம்பிக்கைத் துரோகத்தைக் கண்முன்னே கண்டவள்,
அன்னையே..
நீ சிந்திய இரத்தம், அது இந்திய இரத்தம்
இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காத்திடும் இரத்தம்,
காத்து நிற்போம் கடமையை உணர்ந்து,
காலமெல்லாம் உன் தியாகத்தை நினைத்து.

சுலீ அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி